திமுக உடன் கூட்டணி வைத்தால் என் கல்லறை கூட மன்னிக்காது - வைகோ
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் எனது கல்லறை கூட என்னை மன்னிக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதிமுக மகளிரணி சார்பில் உலக பெண்கள் தின விழா மற்றும் அரசியல் சாரா பெண்கள் கட்சியில் இணையும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய வைகோ, ஆரம்பம் முதல் இறுதி வரை ஆவேசமாக பேசினார்.

பிரமாண்ட குருசேத்திர யுத்த களத்தை நோக்கிச் செல்லும் வேளை இது. அந்த களத்தில் நிச்சயம் நாம் வெல்வோம். இந்த இயக்கம் தான் எனது குடும்பம். நீங்கள்தான் என் உடன்பிறந்தவர்கள் என்றார்.
திமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகித்த மத்திய அரசுதான் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி தமிழ் இனத்தை அழிக்க காரணமாக இருந்தது. ஒரு இன அழிவுக்கு காரணமானவர் கருணாநிதி. அவரது இயக்கத்துடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்? அப்படி நான் அவரது இயக்கத்துடன் உறவு வைத்தால் எனது கல்லறை கூட என்னை மன்னிக்காது.
தமிழ் இனத்துக்கே கேடு விளைவித்தவர்கள் மகளிர் உரிமை மாநாடு போடுகிறார்கள். தமிழகத்தில் மதுவை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி. மது கோர தண்டவம் ஆட காரணமே அவர்தான். கருணாநிதிக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மது விற்பனையை தமிழகத்தில் பரவலாக்கினார்கள்.
மக்கள் நல கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கை நிச்சயம் அமல்படுத்துவோம். மதுவின் கொடுமையிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டுமெனில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்'' என்றார் வைகோ.
காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக ஜி.கே.வாசன் இருந்த போதுதானே இலங்கையில் யுத்தம் நடைபெற்றது. இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து வாசன் விலகி தனிக்கட்சி தொடங்கிவிட்டார் என்பதற்காக அவரை கூட்டணிக்கு அழைப்பது மட்டும் நியாயமாகுமா? என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications