ஏப். 12ல் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்.. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன
ஜெயலலிதா மரணமடைந்ததால் ஏற்பட்ட காலியான ஆர்.கே. நகரில் அடுத்தமாதம் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை மாவட்டத்தில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தன.
சென்னை: ஜெயலலிதா மறைவை அடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து தேர்தல் விதி முறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்று முதல்வரானார் ஜெயலலிதா.

உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 75 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பாமலேயே டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். இதனால் ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பலத்த எதிர்ப்பார்பிற்கிடையே இன்று தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. வேட்புமனுக்கள் மார்ச் 23ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 27ஆம் தேதி கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, சென்னை மாவட்டம் முழுவதுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் சென்னை மாவட்டம் முழுவதற்குமே அரசு திட்டங்களை அமல்படுத்த முடியாது. மேலும், அமைச்சர்களின் பயணம், வாகன பிரச்சாரம், விளம்பரம், அரசு விருந்தினர் மாளிகையை பயன்படுத்துதல், அதிகாரிகள் பணியிடமாற்றம் என எதையும் மாநில அரசு செய்யக் கூடாது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications