ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் 'ஜெயலலிதா'
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக ஜெயலலிதா குரல் மூலம் வாக்கு சேகரிக்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
நாம் தமிழர் சார்பில் கலைக்கோட்டுதயம், சுயேட்சையாக டிடிவி தினகரன் போன்ற வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
இந்த இடைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று, மக்கள் ஆதரவு இந்த அரசுக்கு உள்ளது என்பதை காண்பிக்க அதிமுக நிர்வாகிகள் கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.
தகவல் தொழில்நுட்ப பிரிவு
அதன் ஒருபகுதியாக, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் ஏற்பாட்டில், தொலைபேசி அழைப்பின் மூலம் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக ஆர்.கே நகரில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் ஜெயலலிதா குரலில் வாக்கு கேட்கும் வாய்ஸ் கால் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

வாக்கு கேட்கும் ஜெயலலிதா
மறைந்த ஜெயலலிதா தங்களிடம் வாக்கு கேட்பதை போல மக்கள் உணருகிறார்கள். இது மதுசூதனனுக்கு பலம் தரும் என்று அதிமுக நிர்வாகிகள் நம்புகிறார்கள். ஜெயலலிதாவின் ஆளுமைக்கு மக்களிடம் செல்வாக்கு இருப்பதாக அதிமுக நிர்வாகிகள் உறுதியாக நம்புவதன் வெளிப்பாடே இந்த ஆடியோ.

கடந்த தேர்தலில் சர்ச்சை
முந்தைய ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பன்னீர்செல்வம் அணியின் சார்பில் களமிறங்கியிருந்தார் மதுசூதனன். அப்போது ஜெயலலிதாவின் பூத உடலை போன்ற பொம்மையை உருவாக்கி வாக்கு சேகரித்தனர். அது சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில், இப்போது பாதுகாப்பாக இந்த வகை பிரசாரத்தை கையில் எடுத்துள்ளது அதிமுக.

வாக்கு சேகரிக்கும் ஜெ.
"எனதருமை வாக்காள பெருமக்களே, எம்ஜிஆரின் வெற்றி சின்னம் இரட்டை இலைக்கு நீங்கள் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மதுசூதனனை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று போனில் வரும் ஆடியோவில் ஜெயலலிதா குரல் ஒலிக்கிறது. ஜெயலலிதா போன்ற குரலில் பெண்மணி ஒருவரை பேச வைத்து வாக்காளர்களை ஈர்க்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications