ஆர்.கே. நகர் தொகுதியில் வெல்லப் போவது யார்?: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. வெற்றி வாகை சூடி பட்டாசு வெடிப்பது யார் என்று இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்து விடும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகரில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது. பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

எல்லா சாலைகளும் ராணி மேரிக்கல்லூரியை நோக்கி உள்ளன. காரணம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இங்குதான் எண்ணப்படுகின்றன. ஜெயலலிதா உயிரோடு இருந்த போது நடந்த இடைத்தேர்தலில் கூட இவ்வளவு பரபரப்பு இல்லை. காரணம் அவர்தான் ஜெயிப்பார் என்பது உறுதியாக தெரியும். வாக்கு வித்தியாசம்தான் ஆளுங்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தும்.

இந்தமுறை அப்படியில்லை. ஜெயலலிதா இல்லாமல் முதன் முறையாக இடைத்தேர்தலை சந்திக்கின்றனர். இதில் வெற்றி ஆளுங்கட்சிக்கா, எதிர்கட்சிக்கா? அல்லது சுயேட்சைக்கா என்பதுதான் பரபரப்பையும் பதற்றத்தையும் பற்றவைத்துள்ளது.

ஆர்.கே. நகர் மக்கள் தீர்ப்பு

ஆர்.கே. நகர் மக்கள் தீர்ப்பு

வாக்குப்பதிவு நடந்து 3 நாட்களுக்குப் பின்னர் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 3 நாட்களும் பலர் தூக்கத்தை தொலைத்துள்ளனர். டி டே என்பது போல தீர்ப்பு நாளும் வந்து விட்டது. காமராஜர் சாலையில் உள்ள ராணிமேரிக்கல்லூரியில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

தீவிர கண்காணிப்பு

தீவிர கண்காணிப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுபாட்டு அறையில் இருந்து வாக்கு எண்ணிக்கை முழுவதும் கண்காணிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணும் அறையில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மைக்ரோ அப்சர்வர், வாக்கு எண்ணிக்கையை பதிவு செய்யும் வீடியோகிரபர் உள்ளிட்டோர் இருப்பார்கள். அவர்கள் முன்னிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

பரபர சுற்றுக்கள்

பரபர சுற்றுக்கள்

வாக்கு எண்ணிக்கை 19 சுற்றுகளாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை பணிகளில் 100 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்களின் முகவர்கள், செய்தியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

காலை 8 மணிக்கு

காலை 8 மணிக்கு

தபால் ஓட்டுக்கள் மொத்தமே 4 தான்தான் என்பதால் காலை 8 மணிக்கே ஓட்டு மிஷினில் உள்ள ஓட்டுக்கள் எண்ணப்படும். காலை 8.30 மணிக்கு முன்னணி நிலவரம் தெரிந்துவிடும். 9 மணிக்கு யார் வெற்றியாளர் என்பது ஓரளவு உறுதி செய்யப்பட்டு விடும்.

முடிவுகள் அறிவிப்பு

முடிவுகள் அறிவிப்பு

12 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 3 மணிக்கு வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் வழங்கப்படும். ஆர்.கே.நகரில் வெற்றி வாகை சூடி பட்டாசு வெடிக்கப் போவது ஆளுங்கட்சியா? வலுவான எதிர்கட்சியா? அல்லது சுயேட்சையா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்து விடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+