ஆர்.கே. நகரில் மொத்தம் 62 வேட்பாளர்கள்… வேட்புமனு வாபஸ் முடிந்து இறுதிப் பட்டியல் வெளியீடு
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, தேர்தல் களத்தில் 62 வேட்பாளர்கள் உள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை தாக்கல் செய்த 8 சுயேட்சைகள் இன்று வாபஸ் பெற்றனர். இதனையடுத்து தேர்தலில் போட்டியிடுவோர் எண்ணிக்கை 62 பேராக குறைந்துள்ளது.
வேட்புமனுக்களை அதிகமானவர்கள் தாக்கல் செய்திருந்ததால் வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடைபெறுமா அல்லது வாக்கு இயந்திரம் மூலம் நடைபெறுமா என்ற குழப்ப நீடித்த நிலையில், 62 பேர்தான் தேர்தல் களத்தில் இருப்பதால் வாக்கு இயந்திரம் மூலமே தேர்தல் நடைபெறும் நிலை உருவாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதனால் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அங்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

வேட்புமனு தாக்கல்
இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கி 23ம் தேதியுடன் முடிந்தது. இதில், திமுக சார்பில் மருது கணேஷ், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன், பாஜ சார்பில் கங்கை அமரன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட 127 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நிராகரிப்பு
இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தலைமையில் நடைபெற்றது. அப்போது, சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் உட்பட 45 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக வேட்பாளர் மருதுகணேஷ், மதுசூதனன், டிடிவி.தினகரன், தீபா உட்பட 82 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இன்று வாபஸ்
இந்த நிலையில், வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். மேலும் 12 மாற்று வேட்பாளர்களும் வாபஸ் பெற்றனர். இதனையடுத்து, வேட்பாளர்களின் எண்ணிக்கை 62 ஆக குறைந்துள்ளது.

மின்னனு இயந்திரம்தான்
வேட்பாளர்களின் எண்ணிக்கை 62 ஆக குறைந்ததையடுத்து மின்னனு வாக்கு இயந்திரம் ஆர்.கே. நகர் தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ளது. ஒரு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்களின் சின்னம் என்ற அளவில் 4 மின்னனு இயந்திரங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பயன்படுத்தப்பட உள்ளன.

முக்கிய வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், அதிமுக சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன், தேமுதிக சார்பில் மதிவாணன், பாஜ சார்பில் கங்கை அமரன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications