மாநில தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகளால் உள்ளாட்சி தேர்தல் ரத்து- ஆர்.எஸ். பாரதி
சென்னை: மாநில தேர்தல் ஆணையம் செய்த பல குளறுபடிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்று திமுக எம்பியான ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையில், நேற்று வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே திமுக அமைப்புச் செயலரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வழக்கை தொடுத்த ஆர்.எஸ். பாரதி கூறியிருப்பதாவது: இந்த தீர்ப்பின் மூலம் திமுகவின் நியாயமான கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் மாநில தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுவருவது தெரிய வந்துள்ளது. மேலும் பல இடங்களில் மாநில தேர்தல் ஆணையம் செய்திருந்த குளறுபடிகளை சரி செய்ய ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு என்பது எஸ்சி, எஸ்டி, பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பானது. இதுதவிர வரும் 6ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு வர உள்ளது. அதில் தேர்தல் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்படலாம். அப்போது அது இன்னும் சிறப்பாக இருக்கும்.
மேலும், தமிழக அரசு இந்த தீர்ப்பை மேல் முறையீடு செய்யுமானால் அதனை எதிர் கொள்ளவும் திமுக தயாராக இருக்கிறது. புதிதாக அறிவிக்கப்படும் தேர்தலை எதிர் கொள்ளவும் திமுக தயாராக இருக்கிறது என்று ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications