For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டுக்கான புரட்சியை ப்ரீ செக்ஸை முன்வைத்து மிக கேவலமாக விமர்சித்த ராதாராஜன்!

ஜல்லிக்கட்டு புரட்சியை ப்ரீ செக்ஸ் டாபிக்கை முன்வைத்து மிக கேவலமாக விமர்சித்திருக்கிறார் ராதாராஜன்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டுக்காக தமிழகமே போர்க்கோலம் பூண்டு புரட்சியில் இறங்கியுள்ள நிலையில் ப்ரீ செக்ஸ் டாபிக்கை முன்வைத்து இப்புரட்சியை கேவலமாக விமர்சித்திருக்கிறார் விலங்குகள் நல ஆர்வலர் ராதாராஜன்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமாக இருந்தது பீட்டா அமைப்பு. இந்த பீட்டா அமைப்பு தமிழகமே கடும் கோபத்தில் இருக்கிறது.

Radha Rajan's comments on Jallikattu Uprising

இந்த நிலையில் லண்டன் பிபிசி தமிழோசை வானொலிக்கு ராதாராஜன் அளித்த பேட்டியில் மிக கேவலமாக தமிழக மக்கள் புரட்சியை விமர்சித்திருக்கிறார். அவரது பேட்டியில் கூறியுள்ளதாவது:

இப்ப வந்து தனித் தமிழ்நாடு வேணும் கேட்டா கண்டிப்பா வந்து 25,000 பேர் வருவாங்களா? வருவாங்க

ப்ரீ செக்ஸுன்னு ஒரு டாபிக் வெச்சா அதுக்கு வருவாங்களா ஒரு 50,000 பேர் கண்டிப்பா வருவாங்க

ஒரு இஸ்யூக்கு தெருவில் வந்து வருவதுதான் பீப்பிள் சென்டிமென்ட்டை பிரதிபலிகிறது சொல்றதை நான் ஏத்துக்க முடியாது.

இந்த நாட்டுல ரூல் ஆப் லா... அதுதான் எல்லாத்தைவிடவும் முக்கியம். சுப்ரீம்கோர்ட்ல ஒரு ஜட்ஜ்மெண்ட் ஆர்டர் வந்திருக்குன்னா அதுக்கு நம்ம கட்டுப்படுத்தான் ஆகனும்

இந்த விஷயத்தில மத்திய அரசோட செயல்பாடு எப்படி இருக்குன்னு எனக்கு தெரியலை. ஜனவரி 2016-ல் இந்த நோட்டிபிகேசன் விட்டது தப்புங்கிறதுதான் என்னோட கருத்து. அதுக்கு அப்புறம் அவங்க ஒன்னும் பண்ணலை.. அதனால வெயிட் அண்ட் வாட்ச்

இன்னிக்கு ஆந்திராவில சேவல் சண்டைக்கு பெட்டிங் நடக்கிறதுன்னு வந்திருக்கு.. 800 மாடு, 900 மாடுகளை லைன்ல நிக்க வெச்சு ஓடவிடுறது எப்படி காட்சிப்படுத்தவில்லைன்னு சொல்றாங்க.. ஜல்லிக்கட்டை வைத்து பணம் சம்பாதிக்கலைன்னு அவங்க சொல்றாங்க.. நான் பணம் சம்பாதிக்கிறாங்கன்னு நான் சொல்றேன் சார்

அவங்க பணம் சம்பாதிக்கவில்லை என்பதற்கும் ப்ரூப் இல்லை.. அவங்க பணம் சம்பாதிக்கிறாங்க என்பதற்கும் என்கிட்ட ப்ரூப் இல்லை... ஆனால் பெட்டிங் நடக்கிறதுங்கிறது மட்டும் இன்னிக்கு வெட்ட வெளிச்சமா வந்திருக்கல்ல

கிரிக்கெட்டுல பெட்டிங் நடக்கிறது... ஆனால் அங்க விளையாடுறது ரெண்டு தரப்பு மனிதர்கள். ஆனால் காளைகள் என்னை வெச்சிண்டு வெளையாடுன்னு கேட்கலையே... காளையோட பெர்மிஷன் இருக்கா.. மனுசங்க ஒருத்தரோ ஒருத்தர் அடிச்சுண்டு விளையாடறது அவங்களோட விருப்பம்.. இதுல காளை விருப்பப்பட்டு வரலை.

மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்தால் அதற்கு பிறகு நாங்க என்ன செய்யனுமோ அதை செய்வோம்.. ஆனால் மத்திய அரசு அதை செய்யாதுன்னு நம்பிக்கை இருக்கு.

இவ்வாறு ராதாராஜன் கூறியுள்ளார்.

English summary
Animal welfare activist Radha Rajan gave an interview to BBC Tamil Raido. She said that she will not accept Jallikattu uprising.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X