வரலாறுக்கு மரணம் கிடையாது.. கலைஞருக்கு மரணம் இல்லை.. ராதாரவி கண்ணீர் அஞ்சலி
கருணாநிதியின் உடலுக்கு நடிகர்கள் எம்.ஆர்.ராதா, எம்ஆர்ஆர் வாசு அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை: வரலாறுக்கு மரணம்.. அதுபோல் கலைஞருக்கு மரணம் இல்லை என்று ராதாரவி மற்றும் எம்ஆர்ஆர் வாசு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி, ராதாரவியின் தந்தையும் நடிகருமான நடிகவேள் எம்.ஆர்.ராதா மேல் தனி மரியாதை கொண்டிருந்தவர். இவர்களது நட்பு நாடக மேடையிலேயே அரும்பி, திரையுலக வாழ்வில் வளர்ந்து, அரசியல் வாழ்விலும் மணம்வீச தொடங்கியது.

கலைஞர் என்ற பட்டம்
கருணாநிதியின் திறமையை கண்டு வியந்த எம்.ஆர். ராதா, 'தூக்குமேடை' என்ற நாடகத்தின்போது கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். அது இன்று கருணாநிதி மறையும்வரை கலைஞர் என்ற வார்த்தையும் ஒட்டி கொண்டே வரும் என்பதை யாருமே அன்றைய காலத்தில் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இரும்பு மனிதர்
கருணாநிதி மீது எம்.ஆர். ராதா குடும்பத்தாருடன் இறுதி வரை மரியாதையும் பாசமும் வைத்திருந்தார். கடந்த வாரம் கூட கருணாநிதிக்கு உடல்நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டு நடிகர் ராதாரவி கோபாலபுரம் சென்று பார்த்துவிட்டு வந்தார். அப்போது, கருணாநிதி இரும்பு மனிதர் என்றும் அவர் மீண்டும் தமிழ் சேவையாற்ற வருவார் என்றும் ராதாரவி கூறியிருந்தார்.

உரிய மரியாதை
இந்நிலையில், இன்று கருணாநிதியின் உடலுக்கு ராதாரவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசியலின் மூத்த தலைவர் இறந்த செய்தியை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவருக்கு 'கலைஞர்' என்ற பட்டத்தை கொடுத்ததே என் தந்தை எம்.ஆர்.ராதாதான். இனி, எல்லோரும் ஒற்றுமையாக இருந்து கருணாநிதியின் கனவை நினைவாக்குவதே அவரது ஆன்மாவுக்கு செலுத்தும் உரிய மரியாதை" என்றார்.

பெருமை பட்ட கலைஞர்
ராதாரவியை தொடர்ந்து. எம்.ஆர்.ஆர். வாசு கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலமைச்சர் என்ற பட்டம் 5 வருடத்திற்கு ஒருமுறை வரும், போகும். ஆனால் தந்தை பெரியார் கொடுத்த 'கலைஞர்' என்ற பட்டம் என்றுமே என் வாழ்நாள் முழுவதும் வரும் என்று என் தாத்தா கருணாநிதி சொல்லி மகிழ்வார்.

கலைருக்கு மரணம் கிடையாது
எல்லோரும் கருணாநிதி இறந்துவிட்டதாக நினைக்கிறார்கள். கிடையாது. வரலாறுக்கு மரணம் கிடையாது.. அதுபோல் கலைஞருக்கும் மரணம் கிடையாது. அவரது குடும்பத்துக்கு அனுதாபம் என்று என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் அது என் குடும்பம்கூட" என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications