மாற்றுத்திறனாளிகள் பற்றிய திமிர் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ராதா ரவி பிடிவாதம்
டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யவில்லை என்றும், தான் பேசியதில் தவறு இல்லை என்றும் சப்பைகட்டு கட்டியுள்ளார் ராதாரவி.
சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து திமிர் தனமாக கேலி செய்த நடிகர் ராதா ரவி, அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி தனது அகங்காரத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து சமீபத்தில்தான் திமுகவில் சேர்ந்தவர் நடிகர் ராதா ரவி. இவர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது, மாற்றுத்திறனாளி குழந்தைகளை மிகவும் புண்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டார்.
ஊனம் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தவிடாமல் மாற்று திறனாளிகள் என்று மாற்றி பயன்படுத்தும் இந்த நவீன யுகத்தில் ராதா ரவியின் பேச்சு மானுட நேசர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குறைமாத குழந்தைகளாம்
அந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராதா ரவி, திமுகவினரை எதிர்க்கும் அரசியல்வாதிகளான அன்புமணி ராமதாஸ், வைகோ உள்ளிட்டோரை, குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுடன் ஒப்பிட்டு, சப்பாணி என கூறி அழைத்தார். மேலும், கைகளை கோணிக்கொண்டு, அந்த குழந்தைகள் படும்பாட்டை கிண்டல் செய்து காண்பித்தார்.

கடும் எதிர்ப்பு
இந்த செயல் சமூகத்தில் பெரும் கண்டன குரல்களை சம்பாதித்தது. மக்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருந்தார். மாற்றுத்திறனாளிகள் ஆதரவு அமைப்பு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ராதாரவிக்கு எதிராக புகார் அளித்துள்லது.

தப்பில்லையாம்
இந்நிலையில் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், தான் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யவில்லை என்றும், தான் பேசியதில் தவறு இல்லை என்றும் சப்பைகட்டு கட்டியுள்ளார் ராதாரவி. எதை பேச வேண்டும் என்று எழுதி கொடுக்க சொல்லுங்கள், இனிமேல் அதை பேசுகிறேன் என்றும் எகத்தாளம் பேசினார் அவர்.

இன்னும் மோசம்
நாய் என்பதை நாய் என்றுதான் கூற முடியும். ஆங்கிலத்தில் டாக் என அழைத்தால் அது நல்ல வார்த்தையாகிவிடும். தமிழில் நாய் என்று அழைத்தால் அதற்காக தகராறு செய்வார்களா என இன்னும்கூட தரம் தாழ்ந்து கருத்து கூறியுள்ளார் ராதாரவி.

இவரு அப்போ எந்த ரகம்?
நானெல்லாம் மன்னிப்பு கேட்கும் ரகம் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மன்னிப்பு கேட்பது மனித குணம் என்பார்கள். ஆனால் ராதா ரவிக்கு அந்த குணம் இல்லை என்று அவரே கூறுவதை வைத்து பார்த்தால்.. ஓ.. அப்ப சரி!
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications