ரஜினிகாந்த் அரசியலுக்கு முன்பே வந்திருக்கலாம்... இப்போ வரக்கூடாது... ராதாரவி பொளேர்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு முன்னரே வந்திருக்கலாம்.. இப்போ வரக்கூடாது என நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு இப்போது வரக்கூடாது என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் 30 ஆண்டுகாலமாக அரசியலுக்கு வரப் போவதாக வதந்திகள் பரவிக் கொண்டே இருக்கின்றன. ரஜினிகாந்தும் இதற்கு தூபம் போடுவது போல அவ்வப்போது செயல்பட்டும் வருகிறார்.
தற்போதும் கூட ரசிகர்களை திடீரென சந்திக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழல் நிலவும் நிலையில் ரஜினிகாந்த் மூலம் பாஜக தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கிறதோ என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ராதாரவி பேட்டி
இதனிடையே நியூஸ் 7 டிவி சேனலுக்கு ராதாராவி நேற்று பேட்டியளித்திருந்தார். அதில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு ராதாரவி அளித்த பதில்:

அரசியலுக்கு வரமாட்டார்
அய்யய்ய்ய... அவரை சும்மா அரசியலுக்கு வாங்க.. அரசியலுக்கு வாங்கன்னு... இங்க எவ்வளவு தலைவலி இருக்குன்னு அவருக்கு தெரியாதா? தெரியுமே.. .அவரெல்லாம் அரசியலுக்கு வரமாட்டார் என்பது என்னுடைய கணிப்பு

இப்ப வரவும் கூடாது
அவரு அரசியலுக்கு வந்திருக்கனும்... அதுக்கு ஒரு டைம் இருந்தது... அது போய்விட்டது... இப்ப அவரு வரக்கூடாது.. ஏன்னா அவரு ஒரு நல்ல மனிதனுங்க... அவரு ஒருவாட்டி என்னை கேட்டார்.. எப்ப கேட்டார்னா குரு சிஷ்யன் டைம்ல...

ரஜினிக்கு ஐடியா இருந்தது
ஒரு மலையில படப்பிடிப்பு.. கவுதமி அப்பதான் அறிமுகம்.. பல்லாவரம் பக்கத்தில்.. அப்ப என்கிட்ட ரஜினி கேட்டார்.. எப்படி ரவி தேர்தல்ல வந்தா எப்படி இருக்கும்?னு ... நான் அதுக்கு வந்தா உங்களை எல்லாரு திட்டுவானுங்க சார்... என்றேன்.

திட்டித்தானே ஆகனும்
நீங்க? என்றார்.. நானும் திட்டுவேன் சார் என்றேன். ஒருவேளை ரஜினிகூடவே நான் இருந்துட்டா நான் அவரை திட்டமாட்டேன்... அவரை எதிர்த்து போய் நிற்கும்போது அப்ப மைனஸ் பூராவும் பேசித்தான் ஆகனும்.. அது அரசியல் மேடை.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications