ரகுராம்ராஜன் குழு அறிக்கை சரியானதுதானாம்… சொல்கிறார் நாராயணசாமி

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது:
பின்தங்கிய மாநிலங்களுக்கு நிதியளிப்பது மத்திய அரசின் கடமை என்றார். முன்னுரிமை அடிப்படையில் பின்தங்கிய மாநிலங்களுக்கு நிதியளிக்க பரிந்துரை செய்யப்படுவதாக கூறிய நாராயணசாமி, தமிழகம் வளர்ச்சி அடைந்து வரும் மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்றார்.
பீகார், ஒடிசா போன்ற மாநிலங்கள் பின்தங்கிய மாநில பட்டியில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ரகுராம்ராஜன் குழு அறிக்கை சரியானதுதான் என்று தெரிவித்த நாராயணசாமி, அந்த அறிக்கை சரியல்ல என்று கூறுவது தவறு என்றார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வரும் 7ஆம் தேதி இலங்கை செல்கிறார் அப்போது, தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பது குறித்து இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறினார்.
ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கையை அமல்படுத்தக் கூடாது என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார் இந்த நிலையில் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications