இசைப் புயலை ட்யூன்போடச் சொல்லி ரசித்த கிரிக்கெட் புயல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னைக்கு வருகை தந்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இசைப்புயல் என்று வர்ணிக்கப்படும் ஏ ஆர் ரஹ்மானை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
ஒரு நிகழ்ச்சிக்காக நேற்று சென்னைக்கு வருகை தந்தார் சச்சின் டெண்டுல்கர். ரஹ்மானின் தீவிர ரசிகராகன சச்சின், தனது நிகழ்ச்சி முடிந்ததும், சுப்பராயன் தெருவில் உள்ள ரஹ்மானின் வீட்டுக்குச் சென்றார்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர் இருவரும். பின்னர் ரஹ்மான் இசையமைக்கும் விதம் குறித்து கேட்ட சச்சின், அவரை சில ட்யூன்கள் வாசித்துக் காட்டச் சொல்லி ரசித்தார்.
தான் ஏ.ஆர். ரஹ்மானின் தீவிர ரசிகர் என்றும், மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தாகவும் சச்சின் கூறினார்.
இந்தச் சந்திப்பின்போது ரஹ்மானின் தாயாரும் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications