கடும் காற்று... கொட்டும் மழை... திருச்சியில் குடையை மறுத்து நனைந்தபடியே பேசிய ராகுல்
திருச்சி: திருச்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, குடை வேண்டாம் என்று மறுத்து விட்டு, கொட்டும் மழையில் நனைந்தபடியே பேசினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டு வருகிறார். அதன்படி, நேற்று தமிழகம் வந்த ராகுல்காந்தி, திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

ராகுல் வருவதற்கு முன்னதாகவே அப்பகுதியில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. ஆனால், மழையையும் பொருட்படுத்தாது ராகுலைப் பார்ப்பதற்காக தொண்டர்கள் வெள்ளமாக திரண்டிருந்தனர்.
மழையில் நனைந்தபடியே மேடை ஏறினார் ராகுல். தொண்டர்கள் மத்தியில் பேச மைக் முன் நின்ற ராகுலுக்கு, பாதுகாவலர் ஒருவர் குடை பிடிக்க முயன்றார். ஆனால், அதனை மறுத்து விட்ட ராகுல் கொட்டும் மழையில் நனைந்த படியே பேசினார்.
மழையோடு காற்றும் சேர்ந்து வீசியது. ஆனால், அதனை எல்லாம் பொருட்படுத்தாது தனது பேச்சில் மட்டுமே கவனம் செலுத்தினார் ராகுல்.
தனது உரையில், ‘தமிழகத்தில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டம் குறித்துப் பேசிய ராகுல், தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரைப் பற்றி புகழ்ந்து பேசினார். மேலும், ‘தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் புதிய மதுக்கொள்கை கொண்டு வரப்படும்' என அவர் தெரிவித்தார்.
மேடை ஏறியதும் தமிழில் வணக்கம் கூறி, குடை பிடிக்காமல் மழையில் நனைந்த படி பேசி என தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் ராகுல்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications