ஸ்டாலின் பேரன் பேத்திகளுடன் இந்திராவின் பேரன் ராகுல் உற்சாக சந்திப்பு
ஸ்டாலின் வீட்டிற்கு முதன் முறையாக சென்ற ராகுல் காந்தி அங்கிருந்த ஸ்டாலினின் பேரன் பேத்திகளுடன் உற்சாகமாக பேசி மகிழ்ந்தார்.
சென்னை: திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேரன் பேத்திகளுடன் இந்திராவின் பேரன் ராகுல்காந்தி உற்சாகமாக பேசி மகிழ்ந்தார். காங்கிரஸ் கட்சியின் நான்காம் தலைமுறை தலைவர் ராகுல் காந்தி முதன் முறையாக ஸ்டாலின் வீட்டிற்கு வந்தார்.
இத்தனை ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்தாலும் கோபாலபுரத்திற்கோ, ஸ்டாலின் வீட்டிற்கோ ராகுல்காந்தி சென்றதில்லை.
கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவில் பங்கேற்க வந்த ராகுல்காந்தி முதன்முறையாக ஸ்டாலின் வீட்டிற்கு சென்றார். அவருடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் சட்டசபை தலைவர் ராமசாமி ஆகியோர் சென்றனர்.

இந்திரகாந்தியின் பேரன்
முதன்முறையாக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பேரன் ராகுல்காந்தி, தனது வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க உற்சாகமாக தனது மனைவி துர்கா உடன் வந்து வரவேற்றார் ஸ்டாலின்.

மஞ்சள் பொன்னாடை
மஞ்சள் நிற பொன்னாடை போர்த்தி, மஞ்சள் மலர்களால் நிறைந்த மலர் கொடுத்து வரவேற்றார் ஸ்டாலின். புன்னகை பூத்த முகங்களுடன் பேசி மகிழ்ந்தனர்.

குதூகல சந்திப்பு
தனது வீட்டிற்கு முதன் முறையாக வந்த ராகுல்காந்திக்கு தேநீர் கொடுத்தார் துர்கா ஸ்டாலின். தேநீர் விருந்து முடிந்த உடன் குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்தார்.

பேரன்கள், பேத்திகள்
காங்கிரஸ் கட்சியின் நான்காம் தலைமுறை தலைவர் ராகுல்காந்தியும், திமுகவின் நான்காம் தலைமுறை வாரிசுகளும் உற்சாகமாக பேசி மகிழ்ந்தனர். இந்திரா காந்தியின் பேரன் ராகுல்காந்தியுடன் ஸ்டாலினின் பேரன், பேத்திகள் உற்சாகமாக பேசி மகிழ்ந்ததை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பார்த்து ரசித்தனர்.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications