மதுரை திமுக-காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் எம்.ஜி.ஆரை புகழ்ந்த ராகுல் காந்தி
மதுரை: மதுரையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் போன்றோர் ஒரே மேடையில் அமர்ந்து பிரசாரம் செய்தனர்.

ஸ்டாலினை தொடர்ந்து பிரசாரம் செய்த ராகுல் காந்தி பேசியதாவது:
இரு வகையான அரசியல் தலைவர்கள் உண்டு. ஒரு தரப்பு மக்களிடம் நெருங்கி பழகி, அவர்கள் கஷ்டங்களை புரிந்து கொள்பவர்கள். இன்னொரு தரப்போ, தனக்கு எல்லாம் தெரியும், உலகிலேயே தான் மட்டுமே அறிவாளி என்று நினைத்து, நான்கு சுவருக்குள் முடக்கி கொள்பவர்கள்.
பெரியார், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் மக்களிடம் நெருங்கி பழகினர். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டனர். ஸ்டாலினிடமும் அதேபோன்ற குணாதிசியம் இருப்பதை உணர்கிறேன்.
ஆனால், தமிழக முதல்வரோ, மக்களை விட்டு விலகி இருக்கிறார். இந்த முதல்வர் தனக்கு அறிவுரை கூற அறிவாளி யாருமே இல்லை என்று நினைத்துக்கொண்டுள்ளார். இந்த மாநிலத்திலேயே தான் மட்டுமேதான் அறிவாளி என ஜெயலலிதா நினைத்துக்கொண்டுள்ளார். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆரை ராகுல் காந்தி, புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
