ஹாய் ஹாய்.. ஸ்டாலின் பேரன், பேத்திகளுடன் உரையாடிய ராகுல் காந்தி !
சென்னை: கருணாநிதியின் வைரவிழாவில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி முன்னதாக ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்துகொண்டார்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதன் வைர விழாவும், அவரது 94வது பிறந்த நாள் விழாவும் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் பங்கேற்க பங்கேற்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தார். திமுக சார்பில் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. ஆகியோர் ராகுல் காந்தியை வரவேற்றனர்.
அதன் பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு ராகுல் காந்தி சென்றார். அவரை ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் ராகுல் காந்திக்கு ஸ்டாலின் தேனீர் விருந்து அளித்தார். அப்போது ஸ்டாலினின் பேரன், பேத்திகள், மகள், மருமகனுடன் சிறிது நேரம் உரையாடினார் ராகுல் காந்தி. ஸ்டாலின் மனைவி துர்காவிடமும் நலம் விசாரித்தார். ராகுல் காந்தி. இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் சட்டசபை தலைவர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் திமுக பத்தாண்டு காலம் இருந்த போதும், பலமுறை சென்னைக்கு வந்த ராகுல்காந்தி கோபாலபுரம் வீட்டிற்கோ, ஸ்டாலின் வீட்டிற்கு வந்ததில்லை. ஸ்டாலின் வீட்டிற்கு வந்து ராகுல்காந்தி தேநீர் விருந்தில் பங்கேற்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து











Click it and Unblock the Notifications