ராகுலை பார்த்தாலே மோடிக்கு அல்லுவிடுதா?.. குஷ்பு சரமாரி கேள்வி!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பின்பக்க இருக்கை கொடுக்கப்பட்டது குறித்து குஷ்பு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சென்னை: டெல்லியில் 69வது குடியரசுத் தின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நான்காவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
தற்போது இது குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பின்பக்க இருக்கை கொடுக்கப்பட்டது குறித்து குஷ்பு கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மரியாதை
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் ஆன பின் நடக்கும் முதல் குடியரசுத் தின கொண்டாட்டம் இது. இதுவரை ராகுல் காந்தி எப்போதும் முதல் வரிசையில் உட்காரவைப்பட்டு இருந்தார். அதேபோல் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கு எப்போது முதல் வரிசை கொடுக்கப்பட்டு மரியாதையை அளிக்கப்பட்டு வந்தது.

முதல் தடவை
காங்கிரஸ் கட்சியில் பெரிய அளவிற்கு வந்த பின் இந்த முறைதான் இவர் பின்பக்க இருக்கையில் அமர்ந்து இருக்கிறார். அதேபோல் முதல் வரிசையில் ராகுலும், சோனியாவும் அமராமல் போனது இதுவே முதல்முறையாகும். இது கட்சியினர் இடையே கடும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
|
மீறல்
அதேபோல் எப்போதும் எதிர்க்கட்சி தலைவர் முதல் வரிசையில் உட்கார வைக்கப்படவேண்டும். அதுவே விதி. இந்த குடியரசு தின விழாவில் அந்த விதி மீறப்பட்டு இருக்கிறது. அவருக்கு நான்காவது வரிசை கொடுக்கப்பட்டது விதி மீறல் என்று இவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

குஷ்பு
இதுகுறித்து குஷ்பு தனது பேஸ்புக் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். அதில் ''வேண்டுமென்றே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜக 4வது வரிசையில் இடம் கொடுத்து இருக்கிறது. அவரை அவமானப்படுத்த வேண்டும் என்று இப்படி செய்துள்ளது. ராகுல் காந்தி அங்கு இருப்பது கூட மோடிக்கு இவ்வளவு பயத்தை கொடுக்கிறதா?. ஆனால் ராகுல் எப்போதும் நாட்டிற்கு தன் மரியாதையை செலுத்துவார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications