இளைஞர்களின் உணர்வுகளைப் புரிந்த ஒரே தலைவர் ராகுல் தான்.. சுதர்சன நாச்சியப்பன்

விழுப்புரத்தில் நடந்த அகில இந்திய மனித உரிமைப் பேரவையின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நாச்சியப்பன் பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தல் வரும்போது கடைசி கட்டத்தில் கூட்டணியை விட்டு வெளியேறுவது திமுகவுக்கு புதிதல்ல. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் அந்த கூட்டணியில் இடம்பெற்றன. அப்போது அவர்கள் ஒன்று சேர்ந்து தனி ஈழத்திற்காகவோ, தமிழர்களுக்காகவோ குரல் கொடுத்தார்களா?.
பிரபாகரன் இலங்கையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக ராஜீவ்காந்தி 13வது அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார். கடந்த 5 ஆண்டுக்கும் மேல் மத்திய மந்திரி சபையில் இடம்பெற்ற திமுக, தனி ஈழத்திற்காக அமைச்சரவையிலிருந்து வெளியேறுகிறோம் என்று கூறினார்களா?.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஏ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் காரணம் அல்ல. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியில் வந்து விட்டோம் என்று கூறினீர்கள். அதற்கு பிறகு ஏன் ஓட்டுக்காக எங்களை வந்து சந்தித்தீர்கள்?.
சோனியாகாந்தி கொண்டு வந்த உணவு பாதுகாப்பு சட்டம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி மக்களுக்கு நன்மை செய்கின்ற கட்சி.
லோக்சபா தேர்தலில் தனித்து நிற்போம் என்று நினைத்து தற்போது இருந்தே பணியாற்ற தொடங்குங்கள். இளைஞர்களின் உணர்வை புரிந்து கொண்ட ஒரே தலைவர் ராகுல்காந்தி. அவர்தான் அடுத்த பிரதமர் என்றார் அவர்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications