சிலைகள் பறிமுதல் விவகாரம்.. சென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 2வது நாளாக இன்றும் சோதனை!
சென்னையில் நேற்று 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இன்றும் இரண்டாவது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்ற
Recommended Video

சென்னை: நேற்று 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இன்றும் இரண்டாவது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி தெற்குமாட வீதி தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ரன்வீர்ஷா. தொழில் அதிபரான இவர், சென்னை கிண்டியில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
நேற்று காலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு, 2 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 35 போலீசார் அடங்கிய படையினர் சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள ரன்வீர்ஷா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

89 சிலைகள் பறிமுதல்
இதில் ரன்வீர் ஷா வீட்டில் சிலைகள் மற்றும் கல்தூண்கள் அலங்காரமாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், அங்கிருந்த 12 வெண்கல சிலைகள், 22 கலைநயம்மிக்க கல்தூண்கள் மற்றும் பிள்ளையார், நந்தி உள்பட 55 சிலைகள் என மொத்தம் 89 பழங்கால கலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
[ 89 சிலைகள் பறிமுதல்.. 100 கோடி மதிப்பு.. மின்சார கனவு படத்தில் நடித்த அதே நபரா இந்த ரன்வீர் ஷா?]

4 லாரிகளில்
இதில் கற்சிலைகள் அதிக எடை கொண்டவை என்பதால் கிரேன் உதவியுடன் அந்த சிலைகள் அனைத்தும் 4 லாரிகளில் ஏற்றப்பட்டு, கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ரூ.100 கோடி மதிப்பு
இந்த சிலைகள் அனைத்தும் தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சிலைகளின் மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்றும் சோதனை
இந்நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக ரன்வீர்ஷா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications