காவிரி .. மத்திய அரசைுக்கு எதிரான ரயில் மறியல் முழு வெற்றி - பி.ஆர். பாண்டியன் #cauvery
தஞ்சாவூர்: காவிரி பிரச்சனையில் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ரயில் மறியல் போராட்டம் முழு வெற்றியை பெற்றுள்ளது என்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
காவிரியில் இருந்து முறையாக தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகத்திற்கு ஆதரவாக நடந்து மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது. இதனை உடனடியாக மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனைக் கண்டித்து தற்போது நடந்து வரும் போராட்டத்தின் இன்னொரு பகுதியாக, கர்நாடகத்திற்கு மின்சாரம் செல்லும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி அலுவலகம் முன்பு நாளை போராட்டம் நடத்தப்படும்.

தமிழக அரசைப் பொருத்தவரை உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழக விவசாயிகளின் சார்பாக மத்திய அரசிடம் உரிய முறையில் பேசி தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும்.
காவிரி நதி நீர் பிரச்சனைக்காக தமிழக விவசாயிகளால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்திற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை எனில் மத்திய அரசு அலுவலகங்களை கைப்பற்றிவோம். அந்த அலுவலகங்கள் தமிழகத்தில் இயங்காதவாறு செய்வோம்.
தமிழக விவசாயிகளையும், மக்களையும் மதிக்காமல் வஞ்சகம் செய்து வரும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகம் இருக்க வேண்டுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள டெல்டா பகுதிகளை ஆய்வு செய்வதற்காக அண்மையில் வந்து சென்ற மத்திய வல்லுநர் குழு நியாயமான அறிக்கையை தாக்கல் செய்யும் என்று நம்புகிறேன். ஏனென்றால் அவர்கள் தமிழகம் வந்து ஆய்வு செய்த போது டெல்டா பகுதிகள் முழுவதும் ஒரு பாலைவனம் போல் காட்சி அளித்ததைக் கண்டு அதிர்ந்து போனர்கள். எனவேதான் மத்திய வல்லுநர் குழு நியாயமான அறிக்கை அளிக்கும் என்று சொல்கிறேன். நிச்சயம் தமிழகத்திற்கு நீதி கிடைக்கும் என்று பி.ஆர். பாண்டியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications