எங்கே செல்லும் இந்தப் பாதை... இசையின் மூலம் விழிப்புணர்வு... 'தண்டவாளங்களில் தற்கொலை செய்யாதீர்'!
சென்னை: சென்னையில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பவர்களை கட்டுப்படுத்தும் வகையில் இசை மூலமான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
சென்னையில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
ரயில் நிலையங்களையொட்டி அமைக்கப்பட்டுள்ள சுரங்க நடைபாதைகள், நடைமேம்பாலங்கள் ஆகியவற்றை பயன்படுத்தாமல் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

கொலைக்களமாகும் தண்டவாளங்கள்:
இது போன்ற நேரங்களில் தான் கண் இமைக்கும் நேரத்தில் இறப்பு நடந்து விடுகிறது. அதே நேரத்தில் காதல் ஜோடிகளும், குடும்ப பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களும் ரயில்வே தண்டவாளங்களை தற்கொலை களமாகவே மாற்றி வருகிறார்கள்.
விழிப்புணர்வு இயக்கம் தீவிரம்:
இப்படி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பவர்கள், தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ரயில்வே போலீசாரும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சமீபத்தில் ரயில்வே ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக்கொண்ட சீமா அகர்வால் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை தீவிரப்படுத்தினார்.
கட்டுப்படுத்தப்பட்ட தற்கொலைகள்:
இதன் காரணமாக தற்கொலை சம்பவங்களும், ரயிலில் அடிபட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
40 பேர் வரை மரணம்:
கடற்கரை ரயில் நிலையம் முதல் பரங்கிமலை ரயில் நிலையம் வரை எழும்பூர் ரயில்வே போலீசின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வரை இந்த ரயில் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் மாதத்துக்கு 35ல் இருந்து 40 பேர் வரை தண்டவாளத்தில் அடிபட்டு உயிரிழந்து வந்தனர்.
ஒலிபெருக்கி மூலம்:
இவைகளை கட்டுப்படுத்துவதற்காக ரயில் நிலையங்களில் மாலை நேரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி இசைக்கலைஞர்கள் மூலமாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி வரப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ரயில் நிலையங்களில் ஒலி பெருக்கி மூலமாகவும் விழிப்புணர்வு பிரசாரம் செய்து துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகிறோம். இதன் காரணமாக ரயிலில் அடிபட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக 40 இல் இருந்து 15 ஆக குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications