வெளுத்தெடுக்கும் மழை.. வேகமாக நிரம்பி வரும் நெல்லை மாவட்ட அணைகள்
நெல்லை: தென் மேற்கு பருவமழை தொடங்கி வேகமெடுத்துள்ளதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை வெளுத்து வருகிறது. அதேபோல நெல்லை, தூத்துககுடி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

கோடை காலத்தில் கடும் வறட்சி காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்தது. இதனால் ஜூன் 1ம் தேதி அணையில் இருந்து நீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 76.50 அடியாக உயர்ந்துள்ளது. அணைப்பகுதியில் 96 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 73.10 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் 34 மிமீ மழை பதிவாகியுள்ளது. குண்டாறு அணையின் நீர்மட்டம் 22.13 அடிகாய உயர்ந்துள்ளது. இருப்பினும் அணை மூடப்பட்டுள்ளது. அணைப்பகுதியில் 64 மிமீ மழை பதிவாகியுள்ளது.
பிற அணைகளை பொறுத்தவரை கடனா நதியில் 25, ராமநதியில் 16, கருப்பாநதியில் 12, கொடுமுடியாறு அணையில் 17, அடவி நயினார் அணையில் 51 மிமீ மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரையல் அம்பையில் 8.9, ஆய்க்குடியில் 30.5, சேரன்மகாதேவியில் 4.4, நான்குநேரியில் 8, ராதாபுரத்தில் 4.2, சங்கரன்கோவிலில் 7, செங்கோட்டையில் 31, தென்காசி 23.9, நெல்லையில் 4 மிமீ மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் கார் பருவ நெல் சாகுபடிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications