எப்போதுமே உணர்வுகள்தான் உண்யானவை.. அதனால்தான் நான் வெள்ளத்தில் இறங்கினேன்!- இளையராஜா
மழை வெள்ளம் ஒரு பக்கம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிர்ந்தாலும் பல்வேறு பக்கமிருந்து வந்த உதவிகள் சென்னை மக்களை துயரிலிருந்து மீட்டெடுத்திருகின்றன.
இதற்காக களமிறங்கிய பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், உதவி செய்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்கவும் அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடந்தது. இதில்இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஆகியோர் கலந்து கொண்டு பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுத்து உதவிய தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

இதில் இசைஞானி இளையராஜா பேசியது:
ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் இருந்த மனிதத்தன்மை இந்தபெரு மழை, வெள்ளத்தால் வெளிப்பட்டுள்ளது. வெள்ளம் வருவதற்கு முன்பே இந்த மனநிலையில் நாம் இருந்திருந்தால் இப்படியொரு மழை வந்தே இருக்காது.
இயற்கைச் சீற்றங்கள் எல்லாம் இறைவானால் ஏற்கெனவே நிர்ணயிக்கப் பட்டவை. இயற்கை இறைவனின் வேலையாள். இறைவன்தான் மனிதர்களின் மனதை பண்படுத்தி விட்டு வா என்று மழையை அனுப்பி வைத்திருக்கிறார். இறைவனின் அந்த தண்டனையை இயற்கை நமக்கு கொடுத்து அதன் மூலம் மனிதநேயம் வளர்ந்திருக்கிறது.
எப்போதுமே உணர்வுகள்தான் உண்மையானவை. நான் அதிகமாகபொது இடங்களில் இருப்பதை தவிர்த்து விடுவேன். நான் ஏன் இந்த சகதி, வெள்ளத்தில் சென்று மக்களை சந்தித்தேன் என்றுதெரியவில்லை. அதற்கு எனக்குள் இருக்கு உணர்வுகள்தான்காரணம்.
இந்த மழை கற்றுக் கொடுத்த பாடத்தைக் கொண்டு அடுத்த மழையை நாம் எதிர் கொண்டு விடலாம் என நினைத்து விடவேண்டாம். சுனாமியின் போது எழுந்த பல விஷயங்கள் இந்த மழைக்கு உதவவில்லை. இந்த நொடியில் நடக்கும் எந்த நிகழ்வையும் நாம் சந்தித்தே ஆக வேண்டும் என்பதுதான் உண்மை.
அடுத்த மழையை எப்படி சந்திக்க வேண்டும் என்கிற திறன் மட்டுமே இந்த மழை நமக்கு தந்துள்ளது. மழை, வெள்ளத்தால்நாம் இழந்ததை எதை கொண்டும் ஈடு செய்ய முடியாது," என்றார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications