பகலில் சுளீர் வெப்பம்.. மாலையில் ஜிலீர் மழை.. சென்னை மக்களை கிறங்கடிக்கும் இதமான சூழல்
சென்னை : இன்றும் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் மழை கொட்டியதால் பொதுமக்கள் இதமான சூழலை அனுபவித்தனர்.
சென்னை மக்களை பகல் நேரத்தில் வெப்பம் வாட்டினாலும், இரவு நேரத்தில் மழை பெய்து தணித்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் வெப்பத்தில் இருந்து சற்று விடுபடுகின்றனர்.

இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக இன்றும் சென்னையில் மாலை வேளையில் மழை கொட்டியது. வடபழனி, கோடம்பாக்கம், அண்ணாசாலை, ரயப்பேட்டை, மயிலாப்பூர்,. பட்டினப்பாக்கம் கிண்டி, உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது.
இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாகப் பாய்ந்தது. தொடர்ந்து மாலை வேளைகளில் மழை கொட்டி வருவதால், அலுலவகம் முடிந்து வீடு திரும்புவோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர்.
சென்னையில் புறநகர்களில் அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்தது. இந்நிலையில், வெப்பச்சலனம் நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதே போன்று தமிழக கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications