கொட்டும் கனமழை - தமிழகத்தில் 25 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொட்டி வரும் கனமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், திருச்சி, நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, வேலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று திங்கட்கிழமை பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு திங்கட்கிழமையும் , செவ்வாய்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி, பெரம்பலூர், கரூர், அரியலூர், தஞ்சாவூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர் துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
BREAKING LIVE: ENTIRE CITY OF #CHENNAI FLOODING WITH WATER, HEAVY POURING TO CONTINUE TO LASH THE CITY #chennairains pic.twitter.com/p7nErDxJ0Y
— IMD WEATHER PRODIGY (@IMD_Weather) November 16, 2015 தேர்வுகள் ரத்து
தொடர் மழையால், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை வரை நடைபெறவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications