வாவ்.. தமிழகம் மற்றும் புதுவையில் விட்டு விட்டு கொட்டும் பலத்த மழை! மக்கள் ஹேப்பி!
Recommended Video

சென்னை: தென் கிழக்கு அரபிக் கடலில் புயல் உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுவையில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 11 செ. மீ மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் இந்த மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 5ஆம் தேதி வரை அநேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.
[பெட்ரோல், டீசல் விலை கேட்டாலே வயிற்றில் புளி கரைக்கிறது.. மக்கள் வேதனை]

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இந்த மேலடுக்கு சுழற்சி அக்டோபர் 5ஆம் தேதியை ஒட்டி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். பின்னர் 6 மற்றும் 7 தேதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

சென்னை வானிலை மையம்
இதனால் 6 முதல் 8 ஆம் தேதி வலை மீனவர்கள் லட்சத்தீவுகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடிப்பிற்கு சென்ற மீனவர்கள் அக்டோபர் 5ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மழை
இந்த நிலையில் நேற்று காலை முதல் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. புதுச்சேரியில் மடுகரை, வில்லயனூர், மதகடிப்பட்டு, தவளக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

சென்னையில் மழை
தமிழகத்தில் திருவாரூர், கொரடாச்சேரி, மாங்குடி, கங்களாஞ்சேரி, கூத்தாநல்லூர், நாகை, நாகூர், கீழையூர், கீழ்வேளூர், திருமருகல், திருப்பூண்டி, வேலூர் மாவட்டம் அரக்கோணம், காஞ்சிபுரம் கல்பாக்கம், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதுபோல் புதுவையில் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது. சென்னையில் முகப்பேர், கோயம்பேடு, தாம்பரம், அடையாறு, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை
சென்னையில் குளிர்ந்த காற்று நிலவுகிறது. வடகிழக்கு பருவமழையை வரவேற்க மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வடகிழக்கு பருவமழை வரும் 2-ஆவது வாரத்தில் பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கே எவ்வளவு
தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 11 செ. மீ மழை பதிவாகியுள்ளது. புள்ளம்பாடியிலும் 11 செமீ மழை பெய்துள்ளது. திருச்செந்தூர் 10, சீர்காழி, வேதாரண்யம் தலா 9 செ.மீ மழையும், ராமேஸ்வரம் 8, பாம்பன், புதுச்சேரி, திருமானூர், ஜெயங்கோண்டம், மயிலாடுதுறை 7 செ.மீ மழையும், மதுக்கூர், செய்யூர், நன்னிலம், மன்னார்குடி, காரைக்கால் தலா 6 செ. மீ மழையும் பெய்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு












Click it and Unblock the Notifications