கொட்டும் கோடைமழை... குமரியில் 2 பேர் பலி– 48 மணி நேரத்திற்கு நீடிக்குமாம்!
சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழைக்கு மரம் முறிந்து 2 பேர் பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன.
லட்சத் தீவுகள் அருகே உள்ள காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஆங்காங்கே கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 பேர் மரணம்
குமரி மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று மாலையில் தொடர்மழை பெய்த போது, நாகர்கோவில் காக்கதோப்பு பகுதியை சேர்ந்த முருகனும் அவரது மனைவி ரெங்கம் ஆகியோர நாடான்குளத்தில குளிக்க சென்றனர். அப்போது மழை பெய்து கொண்டிருநதது. இதனை பொருட்படுத்தாமல் படித்துறையில் நின்று குளித்து கொணடிருந்தனர். அபபோது திடீரென அங்கிருந்த தென்னை மரம் முறிந்து ரங்கத்தின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் குளத்திற்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராஜாககமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் அறுமனை அருகே உள்ள சிதறால் மாடவிளாகம் பகுதியை சேர்ந்த தங்கசாமி என்பவர் மாலையில் முறிந்து விழுந்த மரங்களை வெடடி அப்புறப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மரக்கிளைகள் முறிந்து தங்கசாமி விழுந்தது. இதில் அவர் அதே இடத்தில் பலியானார்.

வாழைகள் சேதம்
மலையோர பகுதிகளான அறுகாணி, பததுகாணி,கடையலுமூடு உள்ளிடட் பகுதிகளில் ஏராளமான ரப்பர், வாழை மரங்கள் பயிரிடப்பட்டிருந்தன. இவை பலத்த மழை காரணமாக முற்றிலுமாக சேதம அடைந்தன. சுற்று வட்டாரத்தில் மட்டும் சுமார் 5000க்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனர். தங்களுக்கு நிவாரணம் அளிக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழைக்கு வாய்ப்பு
இதனிடையே லட்சத் தீவுகள் அருகே உள்ள காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஆங்காங்கே கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று பதிவான மழை நிலவரப்படி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 15 செ.மீ., நாகர்கோவிலில் 12 செ.மீ., மழை பெய்துள்ளது.
காற்று மேல் அடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் கன மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் கனமழை
கேரளாவில் இந்த வருடம் கோடை மழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்து கொண்டிருக்கிறது. இதுவரை வழக்கமான பெய்யும் மழையை விட 50 சதவீதத்திற்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

மூவர் பலி
திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையத்திலும் தலைமை செயலகத்திலும் மழைவெள்ளம் புகுந்தது. ஆவண காப்பக அறையில் மழை நீர் புகுந்ததால் அங்கிருந்த ஆவணங்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். மேலும் இடி மின்னல் தாக்கியதில் 3 பேர் இறந்தனர். கனமழையால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. வரும் 25ஆம் தேதி வரை கேரளாவில் பரவலாக மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications