கோவை, திருப்பூர், குமரி மாவட்டங்களில் கோடை மழை.. ஜில், ஜில் வானிலையால் மக்கள் மகிழ்ச்சி
கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததோடு கடுமையான வெப்பமும் நிலவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக திடீரென மழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் மழை வெளித்து வாங்குகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று காலை முதல் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications