தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டஙகளில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக 97 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதனால் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பிற மாவட்டங்களில் பொதுவான வறண்ட வானிலையே நிலவும். வரும் மார்ச் 30-ந் தேதி வரை இத்தகைய வறண்ட வானிலை நிலவும்.
வெப்பநிலையைப் பொறுத்தவரையில் நாளை மறுநாள் மார்ச் 26 முதல் மார்ச் 28-ந் தேதி வரை ஒரு சில பகுதிகளில் வழக்கத்தைவிட 5 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை உயர்ந்து காணப்படும்.
சென்னை மாநகரில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; மழை பெய்ய வாய்ப்பு இல்லை.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் விழுப்புரத்தில் 5செமீ மழை பதிவானது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 3 செமீ மழை பதிவானது. இதேபோல ஈரோடு மாவட்டத்தின் குண்டேரிப்பள்ளம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் 3 செமீ மழை பதிவானது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications