3 நாள் இல்லை பாஸ், டிசம்பர் 2ம் தேதி வரை மழை வெளுக்க வாய்ப்புள்ளது!
சென்னை: தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நாளை முதல் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் மீண்டும் கவலை அடைந்துள்ளனர்.
சமீபத்தில் பெய்த மழையின் பாதிப்பே இன்னும் அகலாத நிலையில், மறுபடியும் ஒரு தொடர் மழை வரப் போகிறதே என்ற கவலையில் மக்கள் உள்ளனர்.
அதேசமயம், இந்த மழை 3 நாட்கள் மட்டும் இருக்காது என்றும், டிசம்பர் 2ம் தேதி வரை இருக்கக் கூடும் என்ற தகவல் மேலும் கவலையைக் கூட்டுவதாக உள்ளது.

சென்னை மையம் சொல்வது என்ன?
சென்னை வானிலை மையத்தின் அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பைப் பார்க்கும்போது சனிக்கிழமை முதல் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை முதல்
சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் 29ம் தேதி காலை 8. 30 மணி வரையிலான கால கட்டத்தில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும், கடலோரத் தமிழகம், தென் மத்திய தமிழகம், டெல்டா மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 முதல் 30 வரை
அதேபோல 29ம் தேதி காலை 8. 30 மணி முதல் 30ம் தேதி காலை 8.30 மணி வரையிலான காலகட்டத்தில், கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கன மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 முதல் டிசம்பர் 1 வரை
30ம் தேதி காலை 8.30 மணி முதல் டிசம்பர் 8.30 மணி வரைகடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கன முதல் மிக கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்றுதான் பாதிப்பு அதிகம் இருக்கும் எனத் தெரிகிறது.

டிசம்பர் 1 முதல் 2ம் தேதி வரை
டிசம்பர் 1ம் தேதி முதல் 2ம் தேதி வரையிலான காலகட்டத்தில் பரவலாக கன மழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

நார்வே மையம் சொல்வது என்ன?
நார்வே வானிலை மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்டி ஞாயிற்றுக்கிழமை முதல் டிசம்பர் 1ம் தேதி வரை கன மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு மிதமான மழை
அதில், ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை அளவு 1.1 செ.மீட்டராக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள் கன மழை
திங்கள்கிழமையன்று கன மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று கிட்டத்தட்ட 6.5 செ.மீ மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை பலத்த மழை
அதேசமயம், செவ்வாய்க்கிழமையன்று மிகக் கன மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2ம் தேதியும் கூட ம்ழை நீடிக்கலாம் என்றும் இது கூறுகிறது.
பார்க்கலாம்.. சமாளித்துதானே ஆக வேண்டும்.
-
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications