குளு குளு மழை.. சென்னைக்கு வராது.. உள்மாவட்டங்களுக்கு மட்டும்தான் வருமாம்.. வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் தமிழக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் வேளையில், கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக ஆங்கே மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது.
இதனால், வெயிலின் கடுமைக்கு பலியான மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மேலும் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

எங்கெல்லாம் மழை?
காலையில் இருந்து வெயில் வாட்டி எடுத்தாலும் மாலை நேரங்களில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கனமழை
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால் உள்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூறைக்காற்றுடன்..
இதே போன்று தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களாகவே இந்தப் பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு லேது
தமிழகத்தின் தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் குளுகுளு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், சென்னைக்கு மழையே வாராதா என்ற ஏக்கத்துடன் சென்னைவாசிகள் அறிவிப்பிற்காக காத்துக்கிடக்கின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications