வெறும் காத்துதான் வீசுது.. மறுபடியும் எப்ப மழை பெய்யும் ரமணன் சார்?

நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை விடவில்லை. பொல பொலவென கொட்டிய மழையால் சென்னையே நனைந்து நடுங்கிப் போய் விட்டது.
காலையிலும் மழை நிற்காமல் பெய்த காரணத்தால்தான் சென்னையிலும், சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் விடுமுறையே விட்டார்கள்.
ஆனால் இப்போது மழை சற்று நின்றுள்ளது. வானம் மேகமூட்டமாக இருக்கிறது. மழை இல்லாத நிலையில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. சில இடங்களில் காற்று பலமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மழை விட்டுள்ளதால் வீட்டுக்குள் காயப் போட்டிருந்த துணிகளைத் தூக்கி வெளியில் காயப் போடுவதில் மக்கள் மும்முரம் காட்டினர்.
மழை நான்கு நாட்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்போதைக்கு மழை நின்றிருந்தாலும் கூட தொடர்ந்து மழை இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்களும் உள்ளனர்.
கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி. குறிப்பாக காவிரி டெல்டாப் பகுதிகளில் நல்ல மழை கொட்டியுள்ளதால் விவசாயிகளும் கூட மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications