தமிழகத்தில் பருவ மழை தீவிரம்.. இன்னும் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருவதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக லேசான குளிர் தொடங்கிவிட்ட நிலையில் மழை என்பது குறைவாகவே உள்ளது. எனினும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இதனை தொடர்ந்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதாக தெரிவித்தார். மேலும், சில தினங்களாக வலு குறைந்திருந்த வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தை ஒட்டிய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருவதாகவும், இதனால் மழை பொழிய வாய்ப்பிருப்பதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
குமரி, நெல்லை, ராமநாதபுரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் அடுத்த 2 நாட்களில் மிதமான மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையை பொருத்தவரை ஓரிரு முறை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நன்னிலத்தில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications