நெல்லையில் திடீர் மழை: அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு
நெல்லை: நெல்லையில் திடீரென பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கோடை வெயில் போன்று காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. வழக்கம்போல் காலை வெயில் நிலவிய போதிலும் மாலை சூழல் திடீரென மாறியது. வானம் கருத்து காணப்பட்ட நிலையில் 6 மணி அளவில் அவை பலத்த இடி மின்னலாக மாறியதுடன் மழையும் கொட்டியது.

நெல்லை மாநகர பகுதிகளில் நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, சமாதானபுரம், பாளையங்கோட்டை, புதிய பேருந்து நிலையம், நெல்லை டவுன், மேலப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் எல்லாம் மழை நீர் தேங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 78.60 அடியாக இருந்த நிலையில் மழையின் காரணமாக அது வேகமாக உயர்ந்து வருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 82.94 அடியிலிருந்து 84.94 அடியாக உயர்ந்துள்ளது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 55.28 அடியாக உள்ளது. நம்பியாறு அணையின் நீர்மட்டம் 8.63 அடியாக உள்ளது. கடனாநதியில் 4மிமீ, ராமநதியில் 7மிமீ, கருப்பாநதியில் 9.5 மி்மீ, குண்டாறில் 2 மிமீ, வடக்கு பச்சையாறு அணையில் 28.2மிமீ, நம்பியாறில் 58 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications