கலாம் நினைவிடத்தில் தேங்கியுள்ள மழைநீர்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
ராமேஸ்வரம்: மறைந்த அப்துல் கலாம் சமாதியை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது. இன்னும் மழையின் தாக்கம் உள்ள நிலையில், அதிக அளவில் நீர் தேங்குவதற்கு முன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் ராமேஸ்வரம் அருகே உள்ள பேகரும்பு என்ற கிராமத்தில் உள்ளது. நாடு முழுவதும் இருந்து ராமேஸ்வரம் வரும் யாத்திரிகர்கள், பொதுமக்கள் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதையொட்டி இங்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் கலாமுக்கு நினைவகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்காலிகமாக மத்திய பொதுப்பணித்துறையினர் கலாம் நினைவிடத்துக்கு நிழல் குடை அமைத்துள்ளனர். அவர் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி இரும்பு கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.முக்கிய பிரமுகர்கள் மட்டும் உள்ளே சென்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையின் காரணமாக கலாம் சமாதியை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது.இதனால் அவரது சமாதிக்கு வருபவர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இதனிடையே இன்னும் 5 தினங்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை கன மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. எனவே, கலாம் சமாதியை சுற்றிலும் கூடுதலாக மழை நீர் தேங்குவதற்கு முன்பாக, தமிழக அரசு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications