இன்னும் 3 நாளைக்கு மழை பெய்யும்... நவ. 27முதல் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க! - ரமணன் எச்சரிக்கை
சென்னை: கடலோர மாவட்டங்களில் மீண்டும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நவம்பர் 27 முதல் 29 வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு என மீண்டும் ரமணன் எச்சரித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்தது. கடந்த 15 தினங்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழை கடலூரையும், சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. மழை சற்றே ஓய்ந்து வெயில் தலைகாட்டியுள்ள நிலையில், மீண்டும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் எச்சரித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், தெற்கு அந்தமான் கடற்பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இந்த மேலடுக்கு சுழற்சி 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று கூறினார்.
தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திர கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார். அடுத்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 10 செ.மீ., அம்பாசமுத்திரம் மற்றும் மணிமுத்தாறில் 3 செ.மீ., மழை அளவு பதிவாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications