24 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும்… குடையோட போங்க… சொல்வது ரமணன்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இதனை தெரிவித்தார்.
தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடைக்கு இதமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மற்றும் குடவாசல், நன்னிலம், கொறடாச்சேரி சுற்றுவட்டாரத்தில் இன்று மதியம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை தீபகற்கத்தின் மேல் அடுக்குகளில் காற்றின் போக்கு சாதகமாக உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியுள்ளார். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றார் ரமணன்
மேலும் அவர், கடந்த 24 மணி நேரத்தில் பள்ளிப்பட்டு, செங்கம் ஆகிய இடங்களில் 11 செ,மீ மழை பதிவாகி உள்ளதாகவும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் 7 செ.மீ மழையும், உடுமலைப்பேட்டை, கலவை ஆகிய இடங்களில் 6 செ,மீ மழையும் பதிவாகி உள்ளதாகவும் கூறினார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications