வெப்பச்சலனம் இருக்காம், இன்று சென்னையில் மழை பெய்யுமாம், சொல்கிறது வானிலை மையம்
சென்னை: சென்னையில் வெப்பச் சலனம் காரணமாக இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக சென்னையில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. தொடர்ந்து 6 நாட்களாக வெயில் 104 டிகிரிக்கும் அதிகமாக கொளுத்தியது.

இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், மெரினா, அடையாறு, தியாகராயநகர், பெரம்பூர், ராயபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 3.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மீனம்பாக்கத்தில் 3.3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மழை காரணமாக வெப்பம் தணிந்ததால் சென்னை நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர், "கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகமாக இருந்ததால் காற்றின் அடர்த்தி லேசானது. இதனால் கடல் காற்று வீசியது. அதன் காரணமாக மழை மேகம் உருவானது. இதையடுத்து வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தது.
இன்றும் அதிக அளவில் கடல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. இன்று மாலையும் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல், மேற்கு பகுதியில் இருந்து தென்மேற்கு பருவகாற்று வீசும். இதனால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications