அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு
சென்னை: அடுத்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், தென்மேற்கு பருவமழை காலம் இம்மாதத்துடன் முடிவடைய உள்ளது. மழை மறைவு பிரதேசமான தமிழகத்தில், கோவை, நீலகிரி, நெல்லை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.லட்சத்தீவுகள் அருகில் உருவாகிய காற்று மேலடுக்கு சுழற்சியால், கடந்த சில தினங்களாக, பல பகுதி களிலும் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக, வடதமிழகத்தின் பல பகுதிகளில், மழை பெய்துள்ளது.லட்சத்தீவுகள் அருகில் உருவாகிய காற்று மேலடுக்கு சுழற்சியானது, குமரி கடல் பகுதி வரை நீடித்துள்ளது. எனவே, அடுத்த, 24 மணி நேரத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரை பொருத்தளவில் மாலை மற்றும் இரவு வேளைகளில் கன மழை பெய்யக்கூடும்.
தமிழகத்துக்கு அதிக அளவு மழையை கொண்டுவரும் வடகிழக்கு பருவமழைக்காலம் அடுத்த மாதம் 20ம்தேதிக்கு பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications