சென்னையை குளிர்விக்கும் சாரல்மழை… வெப்பச்சலனத்தால் மழை நீடிக்குமாம்!!
சென்னை: சென்னையின் பல பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, சிந்தாதிரிப் பேட்டை, கிண்டி மற்றும் நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் முடிந்தும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்து வருகிறது. தலைநகர் சென்னையில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னையின் பல இடங்களில் மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது.

வெள்ளநீர் தேங்கியது
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து குளம்போல தேங்கி இருக்கிறது.

சென்னையில் சாரல் மழை
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

இடியுடன் மழை
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை அளவு
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர கணக்கீட்டின் படி, சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. செம்பரம்பாக்கத்தில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. ஏற்காடு, சென்னை தரமணி உள்ளிட்ட பகுதிகளில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
-
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications