சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும்... வட கடலோர மாவட்டங்களில் கன மழை கொட்டும்!
சென்னை: இலங்கைக்கு அருகே வங்கக் கடலில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளதால் வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறியுள்ளார்.
இன்று காலை 8 மணி முதல் இதுவரை 35 சென்டி மீட்டர் அளவுக்கு தமிழகத்தில் மழை பெய்துள்ளதாகவும் ரமணன் கூறியுள்ளார்.

மழை நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குனர் ரமணன், தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு அருகே தீவிர காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இது தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. மேற்கு வடமேற்காக நகர்ந்து தற்போது உள்ள இடத்தில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காலை 8.30 மணி வரை தமிழகத்தில் சராசரியாக 35 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடல் பகுதி மேலும் கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று ரமணன் தெரிவித்தார்.

மழை அளவு எப்படி இருக்கும்
இன்று முதல் 5 நாட்களுக்கு மழை இருக்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதில், இன்று முதல் 18ம் தேதி காலை 8 மணி வரை கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15ம் தேதி காலை தொடங்கி 17ம் தேதி காலை எட்டரை மணி வரை கனத்த முதல் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17ம் தேதி காலை எட்டரை மணி முதல் 18ம் தேதி காலை எட்டரை மணி வரை ்பரவலாக கனத்த முதல் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
18ம் தேதி காலை எட்டரை மணி முதல் 19ம் தேதி காலை எட்டரை மணி வரை பரவலாக மழை காணப்படும்.
19ம் தேதி காலை முதல் மழை அளவு குறைந்து விடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பலத்த மழை
சென்னையில் இன்று காலை முதல் மிக பலத்த மழை தொடர்கிறது. விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நகரமே ஈரக்காடாகி மூழ்கிப் போயுள்ளது.
விமான நிலையத்தில் பேய் மழை
சென்னை விமான நிலையப் பகுதிகளில் இன்று காலை முதல் விடாமல் மழை பெய்தபடி உள்ளது. அங்கு 3 மணி நேரத்தில் எட்டு செமீ மழை பதி்வானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு!












Click it and Unblock the Notifications