சென்னை மற்றும் புற நகரங்களில் இடியுடன் கனமழை...வடபழனியில் போக்குவரத்து நெரிசல்
சென்னை: சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வடபழனி 100 அடி சாலை, சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சாலைகளில் தேங்கியுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்த நிலையில், தி-நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது.
அதேபோல் கே.கே. நகர், அண்ணாநகர், திருமங்கலம், கொரட்டூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை கொட்டி வருகிறது. கனமழையின் காரணமாக கோயம்பேடு முதல் வடபழனி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்ற வண்ணம் உள்ளன.
அதேபோல், சென்னை புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அம்பத்துார், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், மாதவரம், மணலி, போரூர், திருவேற்காடு, மணலி, மாத்தூர், போரூர், பாடி, செங்குன்றம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications