For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் முழுவதும் பிரேக் விடப்போகுதாம் மழை.. சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்!

தமிழகம் முழுவதுமே புதன் கிழமையில் இருந்து மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகம் முழுவதும் பிரேக் விடப்போகுதாம் மழை.. சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்!- வீடியோ

    சென்னை: தமிழகம் முழுவதும் புதன் கிழமையில் இருந்து மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாய் கனமழை கொட்டி வருகிறது. இதேபோல் புதுச்சேரியிலும் நல்ல மழை வெளுத்து வாங்குகிறது.

    தொடர் மழையால் ஒரு வாரமாக சென்னை உட்பட பல கடலோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இன்று மழை பெய்யும்

    இன்று மழை பெய்யும்

    இந்நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் புதன் கிழமையில் இருந்து மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இன்று முழுவதும் சென்னையில் மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    உள்மாவட்டங்களில் மழை..

    உள்மாவட்டங்களில் மழை..

    காலையில் இருந்து பெய்துவரும் சாரல்மழை தீவிரமடையும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

    மாலை முதல் குறையும்

    மாலை முதல் குறையும்

    நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் இன்று மாலை முதல் மழை குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    மறைவதால் மழை இருக்காது

    மறைவதால் மழை இருக்காது

    கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் நீடித்து வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மறைவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் புதன் கிழமைக்குப் பிறகு இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

    புயலை பொருத்தே இனி மழை

    புயலை பொருத்தே இனி மழை

    தாய்லாந்து வளைகுடா பகுதியில் உருவாகியுள்ள புயல் தற்போது பலவீனமடைந்துள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அது வங்கக்கடலுக்கு வருவதை பொறுத்தே தமிழகத்தில் இனி மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    English summary
    No major rains is seen with the long lasting low fading away very fast, rains will completely stop from 8th (Wednesday) in most places in Tamil Nadu said Tamilnadu weatherman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X