சுமூகமான சந்திப்பு.. மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஆளுநர் உறுதி.. ராஜ் பவன் வெளியிட்ட தகவல்!
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருந்தார். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் உட்பட 10 மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதனை அடுத்து தமிழக சட்டப்பேரவையில் அந்த மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் ரவி தாமதப்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்து சுமுகமாக பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தியது.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். நிலுவையில் உள்ள மசோதாக்கள் விவகாரம் தொடர்பாக பேச ஆளுநர் அண்மையில் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று ஆளுநரை சந்தித்துப் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தச் சந்திப்பின் போது அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. ஆளுநர் உடனான சந்திப்புக்குப் பிறகு அமைச்சர்கள் ரகுபதி, ராஜகண்ணப்பன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர். . தமிழக ஆளுநர் உடனான முதலமைச்சர் ஸ்டாலினின் சந்திப்பு சுமுகமாக இருந்தது. விடை என்ன என்பதை நீதிமன்றத்தில் தான் பார்க்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
இந்நிலையில், முதல்வர் ஆளுநர் சந்திப்பு தொடர்பாக ராஜ் பவன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “முதல்வர் உடனான சந்திப்பு சுமூகமாக இருந்தது. மாநிலம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தனது முழு அர்ப்பணிப்பை இந்த சந்திப்பின்போது ஆளுநர் உறுதி செய்தார். அரசியலமைப்பின் வரம்புக்கு உட்பட்டு மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் ஆளுநர் உறுதியளித்தார்” என ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications