இலங்கையில் கோவில்களை இடித்த ராஜ்பக்சே திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்
சென்னை: இலங்கையில் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய அந்நாட்டு அதிபர் ராஜபக்சே திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சே டிசம்பர் 9-ஆம் தேதி திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்துக்கு வர இருப்பதாகவும், அடுத்த நாள் காலை சுவாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ஈழத்தில் 2,000-க்கும் அதிகமான இந்து ஆலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய அவரை திருப்பதி ஆலயத்தில் மரியாதையுடன் வரவேற்பது சாத்தானுக்கு சாமரம் வீசுவதற்கு இணையான செயலாகும். தமிழர்களின் உணர்வுகளை இதைவிட மோசமாக யாராலும் புண்படுத்த முடியாது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா என தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய நாடுகளில் சுதந்திரமாக நடமாட முடியாத ராஜபக்சே நினைத்தபோதெல்லாம் இந்தியா வந்து செல்ல மத்திய அரசு அனுமதிப்பது சரியல்ல. எனவே, அவர் திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது என் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications