அப்பல்லோவுக்கு இரவில் திடீரென வந்த ராஜாத்தி அம்மாள்! சசிகலாவுடன் 45 நிமிடம் பேச்சு!!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் நேற்று இரவு திடீரென சென்று சசிகலாவை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா 22 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அருண்ஜேட்லி, அமித்ஷா, ராகுல்
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் நாள்தோறும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, வெங்கையா நாயுடு, பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி என டெல்லி தலைவர்களும் அப்பல்லோ வந்து செல்கின்றனர்.

ஸ்டாலின்
தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெரும்பாலானோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்து ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தனர். திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதா உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். சசிகலா நடராஜனை ஸ்டாலின் சந்தித்ததாக கூறப்பட்டாலும் தாம் அமைச்சர்கள் மற்றும் மருத்துவர்களை மட்டும் சந்தித்ததாக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

ராஜாத்தி அம்மாள்
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் திடீரென நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சசிகலாவை சந்தித்து ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

45 நிமிடம் பேச்சு
இருவரும் சுமார் 45 நிமிடம் பேசிக் கொண்டிருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவினரை பரஸ்பரம் சந்தித்துக் கொண்டாலே தலைமை கோபப்படுமோ என அச்சப்படுவர் அதிமுகவினர்... தற்போது திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து வந்து சசிகலாவை நேரில் சந்தித்து ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்து விட்டு செல்வதை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications