For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினி தமிழகத்துக்கே பொதுவானவர்.. வாசன் 'நச்'!

|

ரிஷிவந்தியம்: தமிழக மககள் அனைவருக்கும் பொதுவானவர் ரஜினிகாந்த். அவரும் அனைவரின் நலனையும் விரும்புவார். எனவே தமிழக மக்களும் அவரின் நலனை விரும்புவர். இந்த சூழலில் நரேந்திர மோடி ரஜினியை சந்தித்திருப்பது அரசியல் ரீதியாக இருக்க வாய்ப்பில்லை. நட்பு அடிப்படையில்தான் இருக்கும் என்று கூறியுள்ளார் மத்திய இணை அமைச்சர் ஜி.கே.வாசன்.

ரிஷிவந்தியம் வந்த வாசன் அஙகு செய்தியாளர்களிடம் பேசுகையில், இப்படித் தெரிவித்தார் வாசன்.

ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்வது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படி விளக்கம் கொடுத்தார் வாசன்.

வாசன் பேட்டியிலிருந்து...

27 தொகுதிகளில் காங்.குக்கு வரவேற்பு

27 தொகுதிகளில் காங்.குக்கு வரவேற்பு

மாநிலம் முழுவதும் இதுவரை 27 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொண்டு உள்ளேன். செல்லும் இடங்களில் எல்லாம் காணப்படும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

234 தொகுதிகளிலும் நிர்வாகிகள் மகிழ்ச்சி

234 தொகுதிகளிலும் நிர்வாகிகள் மகிழ்ச்சி

குறிப்பாக தனித்து போட்டியிடுவதன் மூலம் 234 சட்டமன்ற தொகுதியிலும் கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதனால் மிகுந்த ஆர்வத்துடன் தேர்தல் பணியாற்றுகின்றனர். இதுவே எங்களது வெற்றிக்கு உறுதுனையாக இருக்கும்.

வெற்றி அல்லது 2வது இடம்

வெற்றி அல்லது 2வது இடம்

இன்னும் சொல்லப் போனால் 40 தொகுதியிலும் வெற்றி அல்லது 2-வது இடம் என்ற அளவில் காங்கிரஸ் கட்சி இருக்கும் என்பதை உறுதியாக சொல்லமுடியும். அந்த அளவுக்கு வரவேற்பு காணப்படுகின்றது.

சட்டசபைத் தேர்தலுக்கு அடித்தளம்

சட்டசபைத் தேர்தலுக்கு அடித்தளம்

குறிப்பாக தற்போது நடைபெறும் தேர்தல் எதிர்காலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு மிகுந்த அடித்தளமாக அமையும் என்பதில் மாற்றமில்லை.

அதைச் செ்ஞ்சாலே போதுமே

அதைச் செ்ஞ்சாலே போதுமே

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் மத்திய அரசின் திட்டத்தை மக்களிடத்தில் கொண்டுசென்று அதனை தெரிவித்தாலே போதும். பெரிய அளவிலான வரவேற்பு கிடைக்கும்.

ரஜினி பொதுவானவர்

ரஜினி பொதுவானவர்

ரஜினிகாந்த்தை பொறுத்தவரை தமிழ கத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பொதுவானவர் ஆவார். அவரும் அனைவரின் நலனையும் விரும்புவார்.

மக்கள் நலனையே அவர் விரும்புவார்

மக்கள் நலனையே அவர் விரும்புவார்

எனவே தமிழக மக்களும் அவரின் நலனை விரும்புவர். இந்த சூழலில் நரேந்திர மோடி ரஜினியை சந்தித்திருப்பது அரசியல் ரீதியாக இருக்க வாய்ப்பில்லை. நட்பு அடிப்படையில்தான் இருக்கும்.

இதுதான உங்க டக்கா திமுக...

இதுதான உங்க டக்கா திமுக...

தி.மு.க தற்போது தனது பிரச்சாரத்தில் மதச்சார்பின்மை ஆட்சி தான் சிறந்தது என்ற கோஷத்தை எழுப்பி வருகின்றனர். இது மிகவும் தாமதமான முடிவு ஆகும்.

சிறுபான்மை வாக்குகள் எங்களுக்கே

சிறுபான்மை வாக்குகள் எங்களுக்கே

காங்கிரஸ் கட்சிக்குள்ள சிறுபான்மை ஓட்டுக்களை யாராலும் பிரிக்கமுடியாது.

சோனியா வருகிறார்

சோனியா வருகிறார்

தமிழகத்தில் நாளை 16-ம் தேதி கன்னியாக்குமரிக்கு தலைவர் சோனியாகாந்தி வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் அறிவித்துள்ளார் என்றார் அவர்.

English summary
Nobody can own super star Rajinikanth and he is a common property for the entire Tamil Nadu, said union minister G K Vasan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X