செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்கிறார்?
நடிகர் ரஜினிகாந்த் செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை செப்டம்பர் 2-ஆவது மாதத்தில் சந்திக்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : காலா படப்பிடிப்புக்கு பிறகு, வரும் செப்டம்பர் மாதம் 2-ஆவது வாரத்தில் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை மீண்டும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மே மாதம் 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அவர் அரசியல் குறித்து பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரது பேச்சு மூலம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தங்களை எப்போது சந்திப்பார் என்று மற்ற மாவட்ட ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.
காலா படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் வரும் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் கேட்டபோது, ரசிகர்களுடனான ரஜினியின் சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றனர்.
கடந்த மே மாதம் நடந்த சந்திப்பின் போது அரசியல் குறித்துப் பூடகமாக பேசியது போல இல்லாமல், இந்த சந்திப்பின்போது ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து நேரடியாக அறிவிப்பார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications