கர்நாடக அணை குறித்த சர்ச்சைப் பேச்சு... மன்னிப்பு கோரினார் ரஜினியின் சகோதரர் !
சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவது சரியான நடவடிக்கையே என்ற தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார் ரஜினியின் சகோதரரான சத்தியநாராயணா.
காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது கர்நாடகா. இதற்கு தமிழக அரசியல் கட்சிகளும், டெல்டா மாவட்ட விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு கர்நாடகா அணை கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காது, விவசாயம் பாதிக்கப் படும் என அவர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்தில் வெள்ளி தேர் இழுத்து, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருச்சி வந்திருந்தார் நடிகர் ரஜினியின் மூத்த சகோதரர் சத்தியநாராயணா.
அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சத்தியநாராயணா, கர்நாடகாவின் அணை கட்டும் திட்டம் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அதாவது, ‘கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது சரியான நடவடிக்கையே. இப்புதிய அணைகள் மூலம் இரு மாநில மக்களும் நன்மை அடைவார்கள். தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாது என அவர் தெரிவித்திருந்தார்.
ஊடகங்களில் வெளியான சத்தியநாராயணாவின் பேட்டி விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. இதையடுத்து அடுத்த சில மணி நேரங்களிலேயே தனது கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட சத்தியநாராயணா, மன்னிப்பும் கோரினார்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications