அரசியலுக்கு வருவது உறுதி... ரசிகர்கள் மத்தியில் போர் முரசு கொட்டிய ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்த அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பை ரஜினிகாந்த் இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

Rajini says he will come definitely into politics

கட்டுப்பாடு ஒழுக்கத்துடன் 6 ஆயிரம் பேர் புகைப்படம் எடுத்துச் சென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. கட்டுப்பாடு இருந்தால் போது நாம் எல்லாவற்றையும் சாதிக்கலாம்.

ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வை சிறப்பாக நடத்திய ராகவேந்திரா மண்டப நிர்வாகிகளுக்கு நன்றி. அரசியலுக்கு வருவது பற்ற பயமில்லை, பெரிய ஜாம்பவான்களே பயப்படுகிறார்கள், நான் இன்னும் குழந்தை எனக்கு எப்படி இருக்கும். நான் ஏதாவது சொன்னால் அது விவாதம் ஆகிவிடுகிறது.

சோ சார் முதலிலேயே பயமுறுத்தி வைத்திருக்கிறார், மீடியாக்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். சோவை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்.

யுத்தம் செய் ஜெயித்தால் நாடாளுவேன், வீழ்ந்தால் வீடாளுவேன். யுத்தம் செய்யாமல் போனால் கோழை என்று சொல்வார்கள். நான் எல்லாத்தையும் ஏற்கனவே முடித்தவிட்டேன், இனிஅம்பு விடுவது தான் பாக்கி.

நான் அரசியலுக்கு வருவது உறுதி, வருகிற சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். உள்ளாட்சித் தேர்தலுக்கு குறைந்த காலமே இருப்பதால் நாம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth says he definitely enter into politics and at the time of assembly elections will start a party and contest in 234 constituencies.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற